தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவி

கனடா உக்ரைனுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவியை அனுப்புகிறது.

நெருக்கடியிலிருந்து உக்ரைன்  மீண்டு வரும் வகையில் இந்த உதவி அறிவிக்கப்படுவதாக சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Harjit Sajjan கூறினார்.
இந்த உதவிகள்  எவ்வாறு பிரித்தளிக்கப்படும் என்பதை ஒருங்கிணைக்க அரசாங்கம் உள்ளூர் அமைப்புகள், பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் Sajjan கூறினார்.
இந்த வாரத்தின் பிற்பகுதியில், ரஷ்ய கப்பல்கள் கனேடிய துறைமுகங்கள், உள்நாட்டு நீர்வழிகளுக்குள் நுழைவது தடை செய்யப்படும் எனவும் செவ்வாய்க்கிழமை (01) அறிவிக்கப்பட்டது.
உக்ரைன் மீது Vladmir Putinனின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் அறிவித்தது.
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்படும் என  துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland  உறுதியளித்தார்.
உக்ரைனுக்கு கனடா மேலதிகமான இராணுவ உபகரண உதவிகளை வழங்கும் என இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்தார்.

ரஷ்யாவின் தூதரை கனடாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரஷ்யாவுக்கான கனடாவின் தூதரை திரும்ப அழைக்க  வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

Related posts

14 வயது சிறுமி கடத்தப்பட்டதில் மூவர் கைது

Lankathas Pathmanathan

COVID எதிர்காலத்தில் சவால்களை உருவாக்கும் என்பதை Omicron மாறுபாடு காட்டுகிறது: Trudeau

Lankathas Pathmanathan

கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment