கனடாவில் அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு சுமார் 0.8 சதம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
Ontario, British Columbia போன்ற மாகாணத்தில், எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு 2 டொலருக்கு மேல் விற்பனையாகும் என கூறப்படுகிறது.
கனடாவின் பல பகுதிகளில் சில வாரங்களாக எரிபொருளின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
Toronto, Ottawa;, Winnipeg, Victoria போன்ற நகரங்களில் எரிபொருளின் விலை அண்மைக் காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பை எதிர்கொள்கிறது.