தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார்.

கவனமான பரிசீலனையின் பின்னர்  அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை தனது அரசாங்கம்  முடிவுக்குக் கொண்டுவரும் என பிரதமர் புதன்கிழமை (23) கூறினார்.

துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland, நீதி அமைச்சர் David Lametti, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, அவசரகாலத் தயார்நிலை அமைச்சர் Bill Blair ஆகியோருடன் இணைந்து Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

தொடர் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவசரகாலச் சட்டம் ஒரு வாரத்திற்கு முன்னர் செயல்படுத்தப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம், கால வரையான அவசரகால அதிகாரங்களை உறுதிப்படுத்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது
இந்த சட்டம் திரும்பப் பெறப்படாவிட்டால், 30 நாட்களுக்குப் பின்னர் காலாவதியாகிவிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts

மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவை பரிசீலிக்கும் Ontario!

Gaya Raja

Ontario தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறலில் 360,000 பேர் பாதிப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் COVID முடிவடையவில்லை: சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos

Leave a Comment