Nova Scotia அரசாங்கம் அனைத்து COVID கட்டுப்பாடுகளையும் March மாதம் 21ஆம் திகதியுடன் நீக்க உள்ளது.
முதல்வர் Tim Houston புதன்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
Nova Scotia அரசாங்கம் பொது சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தனது காலவரிசையை முன் நகர்த்துகிறது என அவர் கூறினார்.
மாகாணம் அதன் தற்போதைய போக்கில் தொடர்ந்தால், அனைத்து கட்டுப்பாடுகளும் வழிகாட்டுதல்களும் March 21 அன்று நீக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
Nova Scotia அரசாங்கம் March மாதம் 22ஆம் திகதி 2020ஆம் ஆண்டு அவசரகால நிலையை முதன் முதலில் அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.