Omicron அலையின் போது சுமார் 3 மில்லியன் பேர் Quebecகில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
COVID தொற்றின் ஐந்தாவது அலை இன்று வரை சுமார் மூன்று மில்லியன் பேரை Quebecகில் பாதித்துள்ளது என மாகாணத்தின் இடைக்கால பொது சுகாதார இயக்குனர் தெரிவித்தார்.
தொற்றின் பரவல் முடிவடையவில்லை என எச்சரித்த அவர், தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைவதாக கூறினார் .
தொற்றின் காரணமாக Quebec மருத்துவமனைகளில் புதன்கிழமை வரை (23) தொடர்ந்தும் 1,672 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.