September 19, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 5ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் நாளை (திங்கள்), ஏப்ரல் 6ஆந் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவித்துள்ளார். நேரடி வங்கி வைப்புக்குக் பதிவு செய்தவர்களுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து 3 முதல் 5 நாட்களுக்குள் பணம் வழங்கப்படுவதுடன், ஏனையோருக்குப் 10 நாட்களுக்குள் காசோலை அனுப்பிவைக்கப்படும். விண்ணப்பிக்கவுள்ளோர் Canada.ca/Coronavirus எனற இணைய முகவரியில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நெருக்கடியான வேளையில் கனடியர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதைப் பாராட்டிய பிரதமர் ட்ரூடோ, சவால்களை எதிர் கொள்வதற்கு முன் வந்துள்ள வணிக நிறுவனங்கள், உதவி புரிவதற்காக மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள ஓய்வு பெற்ற மருத்துவர்கள், ஓய்வு பெற்ற தாதிகள், உணவு வங்கிகளும் ஏனைய இன்றியமையாத உதவிகளும் இடம் பெறுவதை உறுதி செய்யும் தொண்டர்கள், விவசாயிகள், கனடியர்கள் அவர்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை உறுதி செய்யும் விநியோக வலையமைப்புக்களில் பணி புரிவோர் உட்படச் சக கனடியர்களுக்கு உதவியாகச் செயற்படும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தொண்டர்களை உதவிக்கு அழைத்துள்ள Health Canada சிறப்புத் திறமைகளைக் கொண்ட தொண்டர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வருகிறது. தொடர்புடையோரைத் தேடிக் கண்டறிதல், மாற்றங்களைக் கண்காணித்தல்(contact tracing and case tracking), தரவுகளைத் திரட்டி அறிக்கையிடல் (case data collection and reporting), மருத்துவத் துறை வளங்களைத் திடீரெனப் பெருமளவால் அதிகரித்தல் போன்றவற்றில் உதவக்கூடிய தொண்டர்கள் Canada.ca/Coronavirus இல் விபரங்களைப் பதிவு செய்யலாம். தேசிய COVID – 19 தொண்டர்களுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 24ஆந் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கனடிய அரசு, கனேடிய பாதுகாப்புப் படையின்றி சேர்வ் பிரிவினரைத் தொடர்பு கொண்டு, அவர்களை முழு நேர சம்பளம், சலுகைகள் என்பவற்றுடன் முழு நேரமாகப் படையில் இணைத்துக் கொள்வதற்கு முற்பட்டுள்ளது. கனடியப் பாதுகாப்புப் படையினர் நாடு முழுவதிலும் அவசர நிலைகளில் உதவிபுரிவதற்கான பயிற்சியையும், வல்லமையையும் கொண்டிருப்பதால் தேவை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்கக் கூடிய படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகப் படைகளில் உள்ளோரின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முற்பட்டுள்ளது.

COVID – 19 காரணமாக மரணமான 233 கனடியர்களின் குடும்பங்களுக்கும் பிரதமர் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஒவ்வொரு கனடியரிடமும் உள்ள பொறுப்பு, வல்லமை என்பவற்றை அவர் வலியுறுத்தினார். COVID – 19 பரவும் ஆபத்தைக் குறைப்பதற்காக, சமூக இடை வெளி பேணுதல், கைகளைக் கழுவுதல், பொது இடங்களுக்குச் செல்வதை மிகவும் குறைத்துக் கொள்ளுதல் என்பன தொடர்பான கனடா பொதுச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றுவதைத் தொடருமாறு அனைத்துக் கனடியர்களிடமும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

Updated Emergency Measures by the Canadian Federal Government on April 5th

Prime Minister Justin Trudeau announced that the Canada Emergency Response Benefit (CERB) applications will open tomorrow (Monday), April 6th. Once applied, the payments will be madewithin 3-5 days for those who are registered for Direct Deposit, and within 10 days by cheque. Canadians looking to apply can get more information online at Canada.ca/Coronavirus.

Prime Minister Trudeau recognized the solidarity of Canadians during such a time of crisis, and thanked all those who are doing their part to help their fellow Canadians including; businesses who have stepped up to meet the challenges, doctors and nurses who have come out of retirement to help, volunteers who make sure food banks and other crucial supports are being delivered and farmers and all working along the supply chain to make sure Canadians can meet their essential needs.

Health Canada has launched a call for volunteers and is building an inventory of volunteers with specialized skills. Volunteers who are able to help with contact tracing, case tracking, case data collection and reporting and Health system surge capacity can visit Canada.ca/Coronavirus to sign up. The application for the National COVID-19 Volunteer Recruitment will be open until April 24th.

The Canadian government has also started to contact reservists for the Canadian Armed Forces, and is offering them full time positions with full time pay and benefits. As the Canadian Armed Forces are trained and capable to assist with emergency response across the nation, the government is seeking to bolster the number of members in the armed forces who can be readily summoned upon should the need arise.

Prime Minister Trudeau offered his condolences to the families of the 233 Canadians who have died due to COVID-19, and reiterated the responsibility and ability that each and everyCanadian has to save lives during this time. He urged all Canadians to continue following the recommendations of Public Health Canada about social distancing, hand-washing, and minimizing venturing to public spaces to reduce the risk of COVID-19 spreading.

Related posts

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja

இலங்கையருக்கு நிதி சேகரித்த Ottawa நகர முதல்வர்!

Lankathas Pathmanathan

இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் Liberal வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment