இரண்டு அரச சார்பற்ற கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்ததை கனடா வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான கனடாவின் முதல் சுற்று பொருளாதார தடைகளையும் பிரதமர் செவ்வாய்க்கிழமை (22) வெளியிட்டார்.
NATOவிற்கான கனடாவின் உறுதிப்பாட்டை வலுவூட்ட Latviaவிற்கு 460 கனடிய ஆயுத படைகளை அனுப்புவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
தவிரவும் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ரஷ்யா ஏற்படுத்தியுள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வெளியுறவு அமைச்சர் Melanie Joly குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் மூலம் ரஷ்யா Minsk உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
உக்ரைனில் வசிக்கும் அனைத்து கனேடியர்களும் கனடா திரும்புமாறு கனடிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.