உக்ரைன் மழலையர் பாடசாலை மீதான ரஷ்யாவின் ஷெல் தாக்குதலை கனடா கண்டிக்கிறது
கிழக்கு உக்ரைனில் உள்ள மழலையர் பாடசாலை மீதான ஷெல் தாக்குதல் மூலம் மேற்கு நாடுகளுடன் நெருக்கடியை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார்.
இந்த விடயத்தில் உக்ரைன் காட்டிய நிதானத்தை பாராட்டுகிறோம் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த குற்றச் சாட்டு கனடாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தால் நிராகரிக்கப்பட்டது
மழலையர் பாடசாலை மீதான குண்டு தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும், பாதி நகரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் உக்ரேனிய இராணுவக் கட்டளையகம் கூறியது.