தேசியம்
செய்திகள்

தொற்றின் நெருக்கடி கட்டத்தில் இருந்து கனடா வெளியேறுகிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

COVD தொற்றின் நெருக்கடி கட்டத்தில் இருந்து கனடா வெளியேறுவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.

ஆனால் சுகாதார நடவடிக்கைகள் எளிதாக்கப்படுவதால் மீண்டும் தொற்றுகளின் அதிகரிப்பு சாத்தியமாகும் என அவர் எச்சரித்தார்

நெருக்கடி நிலையிலிருந்து வெளியறும் நிலையில், தொற்றின் தடுப்புக்கான முக்கிய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தற்போது கனடியர்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு அதிகம் உள்ளது என Tam விளக்கினார்.

பொது சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல் முன்னோக்கி சென்று தொற்றை எதிர்கொள்ளும் நிலையில் கனடா உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்க Google முடிவு

Lankathas Pathmanathan

அமெரிக்க -கனடா எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது: பிரதமர்

Gaya Raja

கட்டுப்பாடுகளை நீக்க மூன்று படி திட்டத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

Leave a Comment