தேசியம்
செய்திகள்

Novavax தடுப்பூசிக்குHealth கனடா அங்கீகாரம்

கனடாவில் பெரியவர்களுக்கு Novavax COVID தடுப்பூசியை பயன்படுத்த Health கனடா அங்கீகாரம் அளித்துள்ளது.

Health கனடா Novavaxசின் புரத அடிப்படையிலான COVID தடுப்பூசியை கடந்த January முதல் மதிப்பாய்வு செய்து வருகிறது.

இரண்டு Novavax தடுப்பூசியானது, மருத்துவ பரிசோதனையில் பங்கேற்பவர்களை COVID தொற்றிலிருந்து பாதுகாப்பதில் 90 சதவீத செயல்திறனைக் காட்டியது.

தவிரவும் கடுமையான நோயை தடுப்பதில் 100 சதவீத செயல்திறன் கொண்டது என இன்று Health Canada வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக Health கனடா கூறுகிறது.

ஆனாலும் குழந்தைகளில் தடுப்பூசியின் பாதுகாப்பும் செயல்திறனும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

Novavax தடுப்பூசி கனடாவில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் புரத அடிப்படையிலான COVID தடுப்பூசியாகும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார்.

இரண்டு Novavax தடுப்பூசிகளை 21 நாட்கள் இடைவெளியில் வழங்க Health கனடா பரிந்துரைக்கிறது.

Related posts

கனடாவிற்கு Omicron மாறுபாட்டை இலக்காகக் கொண்ட 12 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கும் Moderna

Lankathas Pathmanathan

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja

Mexico உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒரு கனடியர் மரணம் – இருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment