Ottawa நகரின் முற்றுகைப் போராட்டத்தில் தொடர்ந்தும் பங்கேற்கும் மக்களை அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர்
எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர பலத்தை பயன்படுத்துவது காவல்துறையினரின் முடிவில் தங்கியுள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார்.
இந்த நிலையில் தலைநகரை 20 நாட்களாக முடக்கி வைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற காவல்துறையினர் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது
வார இறுதியில் Ottawaவில் போராட்டத்தில் கலந்து கொள்ள நினைக்கும் எவரும் அவ்வாறு செய்ய வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino புதன்கிழமை (16) வலியுறுத்தினார்
சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என புதன் காலை Ottawa காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தவறுபவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கைது செய்யப்படலாம் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது