தேசியம்
செய்திகள்

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அவசர காலச் சட்ட பிரேரணை

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்கும் பிரேரணை புதன்கிழமை (16) மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino நாடாளுமன்றத்தில் இந்த பிரேரணையை தாக்கல் செய்தார்.

அத்துடன் பொது ஒழுங்கு அவசர நிலையை அறிவிக்கும் பிரகடனத்தையும் அவர்  சமர்ப்பித்தார்.

இந்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரேரணை மீதான விவாதம் வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த விவாதம் பிரேரணை  வாக்கெடுப்புக்கு தயாராகும் வரை, சட்டத்தின்படி, தடையின்றி தொடரும்.

இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்க NDP சமிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனாலும் இந்த  பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை என  Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen புதன் காலை தெரிவித்திருந்தார்
எதிர்ப்பு நடவடிக்கைகளை தனக்கு இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு எதிர்கொள்ள பிரதமர் Justin Trudeau முயற்சிக்கவில்லை என Bergen குற்றம் சாட்டினார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், மத்திய அரசு 1988 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர்  முதல் முறையாக அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts

Ontarioவில் எட்டாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

புதிய அமெரிக்க அதிபருடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் உரையாடவுள்ளார்!

Lankathas Pathmanathan

பொதுச் சேவைக் கூட்டணியின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment