Saskatchewan முதற் குடிகள் பகுதியில் உள்ள முன்னாள் குடியிருப்பு பாடசாலை மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாடசாலை மைதானத்தில் தரையில் ஊடுருவும் கருவிகளின் தேடுதலின் போது 54 அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஒரு நிகழ்வில் Keeseekoose முதற்குடிகள் இந்த அறிவித்தலை வெளியிட்டன.
St. Philip, Fort Pelly ஆகிய இரண்டு பாடசாலைகள் 1900களின் முற்பகுதியில் இந்த பகுதியில் கத்தோலிக்க திருச்சபையால் இயக்கப்பட்டன.
Fort Pelly பாடசாலைகள் அமைந்திருந்த பகுதியில் 42 குறிக்கப்படாத கல்லறைகளும், St. Philip பகுதியில் 12 கல்லறைகளும் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது