தேசியம்
செய்திகள்

 Ottawa காவல்துறைத் தலைவர் பதவி விலகல்

 Ottawa காவல்துறைத் தலைவர் Peter Sloly தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
 பல வாரங்களாக Ottawaவின் பெரும்பகுதியை முடக்கியுள்ள எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் இன்றைய பதவி விலகல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையின் துணை தலைவர் Steve Bell இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Ottawa போராட்டங்கள் செவ்வாய்க்கிழமை (15) 19ஆம் நாளை எட்டியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் Ottawa  மத்திய பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு Ottawa காவல்துறையின் பதில் நடவடிக்கை  கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் Sloly தனது பதவி விலகலை ஒரு அறிக்கையில் அறிவித்தார்
ஆர்ப்பாட்டம் தொடங்கியதிலிருந்து, Ottawa  நகரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் Sloly குறிப்பிட்டுள்ளார்

Related posts

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja

Toronto துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

இதுவரையில் இல்லாத மோசமான COVID தொற்றின் அலை விரைவில்!

Gaya Raja

Leave a Comment