தேசியம்
செய்திகள்

கனடிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது அவசரகாலச் சட்டம்

கனடிய வரலாற்றில் முதன்முறையாக அவசரகாலச் சட்டம் திங்கட்கிழமை (14) செயல்படுத்தப்பட்டது.
பிரதமர் Justin Trudeau இதற்கான அறிவித்தலை வெளியிட்டார்.
தொடரும் எதிர்ப்பு போராட்டத்தின் பதில் நடவடிக்கையாக அவசரகாலச் சட்டத்தை முதல் முறையாக பிரதமர் செயல்படுத்தினார்.
சட்டவிரோத இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்கு புவியியல் ரீதியாக குறிப்பிட்ட காலக் கெடுவை கொண்ட  நடவடிக்கையாக  இது இருக்கும் என பிரதமர் கூறினார்.
இந்த சட்டம்  சிறப்பு தற்காலிக நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவைக்கு அனுமதி வழங்குகிறது.

திங்கட்கிழமை காலை மாகாண முதல்வர்கள், தனது அமைச்சரவை ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவை Trudeau அறிவித்தார்.

தனது முடிவு குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்துள்ளதாக Trudeau கூறினார்.

சட்டவிரோத, ஆபத்தான நடவடிக்கைகள் தொடர அனுமதிக்க முடியாது என இந்த அறிவித்தலின் போது பிரதமர் கூறினார்.

மூன்றாவது வாரமாக தொடரும் ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பதற்கு இந்த அசாதாரண நடவடிக்கை  குறித்து மாகாண முதல்வர்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர்.

Related posts

காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Quebec மாகாண தலைவர்களின் ஆங்கில விவாதம் நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment