தேசியம்
செய்திகள்

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

நாடளாவிய ரீதியில் தொடரும் போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen வியாழக்கிழமை (10) இந்த அழைப்பை விடுத்தார்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கட்சி தலைவி Bergen முன்னர் பகிரங்கமாக ஆதரித்திருந்தார்.
எதிர்ப்பாளர்கள் தங்கள் கருத்தை  தெளிவாக வெளியிட்டுள்ளதாக தற்போது கூறும் Bergen, தொடர்ந்து இந்த போராட்டத்தை நாடாளுமன்றத்தினுள் Conservative  கட்சி முன்னெடுக்கும் எனவும் கூறினார்.
14ஆவது நாளாக தொடரும் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தும் கனடா- அமெரிக்கா எல்லைக் கடவுகளின் போக்குவரத்தை தடுத்துள்ளது.
இது அமெரிக்காவுடனான போக்குவரத்தை பாதிப்பதுடன் கனடா-அமெரிக்க வர்த்தகத்தை முடக்கியுள்ளது.

Related posts

கனடாவின் பணவீக்க விகிதம் மிகப்பெரிய வருடாந்த வீழ்ச்சியை எதிர்கொண்டது!

Gaya Raja

Toronto தலைமை மருத்துவர் விரைவில் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்கு பிரதமர் மன்னிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment