Alberta மாகாணம் தடுப்பூசி உறுதிப்பாட்டு திட்டத்தை கைவிடுகிறது.
புதின்கிழமை (09) நள்ளிரவு 12 மணி முதல் Albertaவின் மிகவும் சர்ச்சைக்குரிய தடுப்பூசி முறையானது காலாவதியாகிறது என முதல்வர் Jason Kenney அறிவித்தார்.
Alberta பாடசாலைகளில் மாணவர்கள் முகமூடி அணிய வேண்டும் என்ற விதிமுறை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எங்கும் முகமூடி அணிய வேண்டியதில்லை எனவும் அறிவிக்கப்பட்டது
தனது “கவனமான மற்றும் விவேகமான” திட்டத்தைAlbertaவின் COVID அமைச்சரவை குழு அங்கீகரித்துள்ளது என Kenney கூறினார்
தனது இந்த திட்டம், நம் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஒரு பாதையை அமைக்கிறது என முதல்வர் தெரிவித்தார்.