December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 200,000 வேலைகளை இழந்துள்ளது

கடந்த மாதத்தில் கனடிய பொருளாதாரம் 200,000 வேலைகளை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்  கூறுகின்றது.

COVID தொற்றின் Omicron மாறுபாட்டின் பரவலை குறைப்பதற்கான  கடுமையான பொது சுகாதார விதிகளுக்கு மத்தியில் இந்த வேலை இழப்புகள் பதிவாகின.

2021ஆம் ஆண்டு January மாதத்தில் 207,800 வேலைகளை இழந்த பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியை இது குறிக்கிறது.

இந்த இழப்பு வேலையற்றோர்  விகிதத்தை January மாதத்திற்கு 6.5 சதவீதமாக உயர்த்தியது.

இந்த எண்ணிக்கை December மாதம் 6.0 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
பெரும்பாலான வேலை இழப்புகள் Ontario, Quebec ஆகிய மாகாணங்களில் பதிவாகின.

இந்த மாகாணங்கள் கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்தியிருந்தன.

Related posts

Atlantic மாகாண பயணிகளுக்கு திறக்கப்படும் Nova Scotiaவின் எல்லைகள்!

Gaya Raja

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

Lankathas Pathmanathan

ஆண்கள் உலக hockey தொடர் காலிறுதிக்கு கனடா தகுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment