ஐந்து மாகாணங்களை இந்த வாரம் தாக்கவுள்ள குளிர்காலப் புயல் பல நாட்களுக்கு கடுமையான பனிப் பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகின்றது.
சில பகுதிகளில் 30 cm வரை பனி பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
Ontario, Quebec, Maritimes ஆகியன இந்த வாரம் கடுமையான பனிப் பொழிவை எதிர்கொள்கின்றன.
தெற்கு Ontario, தெற்கு Quebec, மூன்று Maritimes மாகாணங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா குளிர்கால புயல் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு Ontarioவின் எல்லை நகரங்களான Sarnia, Windsor, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கனடாவில் அதிக பனிப்பொழிவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன் (02) காலை முதல் வியாழன் இரவு வரை இந்த பகுதிகள் 20 முதல் 30 cm பனிப்பொழிவு, மணிக்கு 50 முதல் 60 KM வேகத்தில் காற்று ஆகியவற்றை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.