தெற்கு Ontarioவை தாக்கவுள்ள குளிர்காலப் புயல் பல நாட்களுக்கு கடுமையான பனிப் பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகின்றது.
இதன் எதிரொலியாக குளிர்கால புயல் கண்காணிப்பு, சிறப்பு வானிலை அறிக்கை ஆகியவற்றை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.
Niagara Falls, Welland, St. Catharines, Grimsby, London, Sarnia, Windsor, Hamilton ஆகிய இடங்களில் 30 cm வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
Toronto பெரும்பாகத்தில் 20 cm வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
Toronto பெரும்பாக்கத்திற்கு கிழக்கே Kingston, Cornwall போன்ற பகுதிகள் 10 முதல் 20 cm வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பனிப்பொழிவு புதன்கிழமை (02) ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான பனிப்பொழிவு சில பகுதிகளில் வாகன பயணத்தை கடினமாக்கும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
தவிரவும் நகர்ப்புறங்களில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த பனிப்பொழிவு வெள்ளிக்கிழமைக்குள் முடிவுக்கு வரும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.