Ottawa நோக்கி அணிவகுக்கும் சரக்கு வாகன ஓட்டுனர்களின் பாரிய அணிவகுப்பு தொடர்பான பாதுகாப்பு அபாயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
COVID தொற்று பொது சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு நாளை முதல் Ottawaவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பங்கேற்பாளர்கள் சனிக்கிழமை (29) Ottawa நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த பேரணியின் பங்கேற்பாளர்களினால் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை கண்டறிந்து வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Ottawa-Gatineau பகுதியில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் முகவரிகளை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘சுதந்திர பேரணி’ என அழைக்கப்படும் இந்த தொடரணியினரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக Conservative தலைவர் Erin O’Toole வியாழக்கிழமை (27) அறிவித்தார்.