பிரதமர் Justin Trudeau தன்னை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளார்.
COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரதமர் தன்னை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளார்.
புதன்கிழமை (26) இந்த தொடர்பு குறித்து அறிந்து கொண்டதாக வியாழன் காலை Twitter மூலம் Trudeau அறிவித்தார்.
ஒரு விரைவு சோதனை மூலம் தொற்றுக்கு எதிராக சோதனை செய்த போதிலும் Ottawa பொது சுகாதார மையத்தின் அறிவுரைக்கு அமைவாக ஐந்து தினங்களுக்கு தன்னை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
COVID தொற்றுக்கான எந்த அறிகுறிகளையும் தான் உணரவில்லை என கூறின Trudeau, ஐந்து தினங்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.