உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை கனடா மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
Operation UNIFIER என்ற இராணுவ நடவடிக்கையை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (26) அறிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் 60 துருப்புக்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் எனவும் பிரதமர் அறிவித்தார்.
உக்ரேனிய ஆயுதப்படைகள், தேசிய காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த நடவடிக்கை March மாதத்துடன் காலாவதியாக இருந்தது.
இதற்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 200 கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களைக் கொண்ட குழு உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால் கனடா உக்ரைன் ஆயுதங்களை அனுப்பாது என அறிவிக்கப்படுகிறது.