Quebec அரசாங்கம் புதிய COVID தளர்வுகளை சில கட்டுப்பாடுகளுடன் நடைமுறை படுத்துகின்றது.
சிறிய கூட்டங்களை அனுமதிப்பதோடு உணவகங்களில் ஐம்பது சதவீதமானவர்கள் உள்ளிருந்து உணவருந்த முடியும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது.
அதிகபட்சம் 25 பேர் கொண்ட 18 வயதுக்கு குறைவானவர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளுக்கான பயிற்சிகளும் அனுமதிக்கப்படுகிறது
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன.
இதேவேளை British Colombia அதன் மாகாணம் தழுவிய தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
COVID தொற்றால் ஏற்படும் அபாயங்களை காரணம் காட்டி இந்த முடிவை மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry செவ்வாய்க்கிழமை (25) அறிவித்தார்.
சமூக பரவல் குறைந்து வந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொற்று தொடர்பான இறப்புகள் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்