Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவர் Erin O’Toole எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற அமர்வுக்கு முந்தைய வியூக சந்திப்புக்கு கட்சி தயாராகும் நிலையில் கட்சியின் தலைமை மீதான O’Tooleலின் பிடி அடுத்த வாரம் ஒரு முக்கியமான சோதனையை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.
O’Tooleலின் கட்சியின் மீதான பிடிமானம், கடந்த ஆண்டு ஏமாற்றமளிக்கும் தேர்தல் முடிவுகளின் உடனடியான பின்விளைவுகளைக் காட்டிலும் மிகவும் பலவீனமாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வார கூட்டத்தில், O’Toole இன் 2021 தேர்தல் பிரச்சாரம் குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.