உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேலும் நடவடிக்கை எடுத்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Joly இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இந்த நிலையில் மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகள் அச்சுறுத்தல் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என கனடாவிற்கான ரஷ்ய தூதர் Oleg Stepanov கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் ஊடுருவலுக்கு பின்னர் இதுவரை 440 நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கனடா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு கனடா ஏற்கனவே ரஷ்யா தொடர்பான நீண்ட தொடர் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனுக்கு உதவ 500க்கும் மேற்பட்ட கனேடிய துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதாக பன்னாட்டு போர்க் குழுவின் கனடிய தளபதி தெரிவித்துள்ளார்.