கனடாவில் தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாகாணங்களிடமும் பிரதேசங்களிடமும் இருந்து பெறப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
புதன்கிழமை (19) இரவு 9 மணி வரை வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் கனடிய வைத்தியசாலைகளில் 10,546 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொற்றின் காரணமாக 31,995 மரணங்களும் இதுவரை கனடாவில் பதிவாகியுள்ளன.