COVID தொற்று எதிர்காலத்தில் பெரும் சவால்களை உருவாக்கும் என்பதை Omicron மாறுபாட்டின் தோற்றம் காட்டுவதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.
பல மாகாணங்களில் Omicron மாறுபாட்டின் அலை உச்சத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறிவரும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
ஒரு அரசாங்கமாக கனேடியர்களுக்கு தேவைப்படும் வரை தொடர்ந்து உதவ தயாராக உள்ளதாக பிரதமர் கூறினார்.
Ontarioவிலும் Quebecகிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் விகிதம் குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
February நடுப்பகுதி வரை தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக Saskatchewan சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
Prince Edward தீவில் குறைந்தது January இறுதிவரை கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது