திங்கட்கிழமை (17) எதிர்கொள்ளப்பட்ட பெரும் பனிப் புயலுக்குப் பின்னர் இன்று Ontarioவில் நெடுஞ்சாலைகளில் பெரும் தாமதங்கள் எதிர்கொள்ளப்பட்டன.
தெற்கு Ontarioவைத் தாக்கிய குளிர்கால பனிப் புயல் காரணமாக Toronto பெரும்பாக பகுதியில் நெடுஞ்சாலைகள் முழுவதும் பெரும் தாமதங்கள் செவ்வாய்க்கிழமை எதிர்கொள்ளப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் இருந்து பனி அகற்றப்பட்டாலும் தாமதங்கள் தொடர்வதாக OPP தெரிவித்தது
திங்கட்கிழமை Ontario ஏரியின் அருகில் உள்ள இடங்களில் 60 centimeters வரை பனிப்பொழிவு ஏற்பட்டது
செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக தெற்கு Ontario கல்வி வாரியங்களில் பல பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.