கடுமையான பனிபொழிவு ஒன்று தெற்கு Ontarioவை தாக்கவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (16) இரவு முதல் தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 40 centimeter வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர்கால புயல் எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பிக்கும் பனிப்பொழிவு திங்கள் வரை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை ஒரு மணி நேரத்திற்கு இரண்டு முதல் ஐந்து centimeter வரையிலான பனிப்பொழிவு சாத்தியமாகும் என சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.
இது திங்கட்கிழமை காலை வாகன பயணத்தை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Niagara Falls, St. Catharines, Welland, Grimsby, Kingston, Ottawa, Peterborough, Brockville, Tweed, Cornwall போன்ற பகுதிகளில் 25 முதல் 40 centimeter வரை பனி பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Torontoவில், 15 முதல் 20 centimeter வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
Pickering, Oshawa, Durham Region, Uxbridge, Beaverton, Vaughan, Richmond Hill, Markham போன்ற பகுதிகள் இதே அளவில் பனிப்பொழிவை எதிர்பார்க்கின்றன.
இதற்கிடையில், Barrie, Orangeville, Kitchener, Guelph ஆகிய பகுதிகள் 5 முதல் 15 centimeter வரை பனிப்பொழிவை எதிர்பார்க்கின்றன.
திங்கள் இரவுக்குள் பனிபொழிவு நின்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.