கனடாவில் போதுமான குழந்தைகள் COVID தடுப்பூசியை பெறவில்லை என பிரதமர் Justin Trudeau கூறினார்.
Omicron, சுகாதாரப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நேரத்தில் போதுமான கனடிய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி போடப்படவில்லை என பிரதமர் Trudeau புதன்கிழமை (12) தெரிவித்தார்.
January 1 ஆம் திகதி வரை, 12 வயதுக்கு மேற்பட்ட கனடியர்களில் 87.6 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
ஆனால் 5 முதல் 12 வயதுடையவர்களில் அந்த எண்ணிக்கை வெறும் 2 சதவீதமாக உள்ளது.
5 முதல் 12 வயதுடையவர்களில் 45.6 சதவீதமானவர்கள் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
நீங்கள் தடுப்பூசி போட முடியுமா என உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள் என புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது Trudeau நேரடியாக குழந்தைகளிடம் கோரினார்.