ஆண்டுதோறும் 100 மில்லியன் தடுப்பூசிகளை பல ஆண்டுகளுக்கு பெறக்கூடிய ஒப்பந்தங்களை கனடிய அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
65 மில்லியன் Pfizer, 35 மில்லியன் Moderna தடுப்பூசிகளை பெறும் ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் குறைந்தது 2024ஆம் ஆண்டு வரை,ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கனடியருக்கும் இரண்டு அல்லது மூன்று தடுப்பூசிகளை வழங்குவதற்கு போதுமான அளவுகளை கனடா பெறும் என கூறப்படுகிறது.
தேவை ஏற்படும் போது, மூன்றாவது அல்லது நான்காவது தடுப்பூசி கனடாவிடம் உள்ளது என பிரதமர் Justin Trudeau நேற்று கூறினார்.
கடந்த ஆண்டு கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்கள் 65 மில்லியன் Pfizer, 35 மில்லியன் Moderna தடுப்பூசிகளை கனடாவிற்கு இந்த ஆண்டு வழங்குகின்றது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 60 மில்லியன் Pfizer, 35 மில்லியன் Moderna தடுப்பூசிகளும் கிடைக்கப்படவுள்ளன.
நான்கு கனடியர்களில் மூவர் ஏற்கனவே முதல் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
அதேவேளை நான்கில் ஒருவர் ஏற்கனவே booster தடுப்பூசியை கனடாவில் பெற்றுள்ளார்.