நாடாளுமன்றத்தின் சுகாதாரம், நெறிமுறைக் குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு விடுக்கின்றன.
Conservative கட்சியின் இந்த அழைப்பு Bloc Quebecois, NDP ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளன.
மூன்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுகளின் தலைவரான Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Sean Caseyக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் வழக்கமான அமர்வுகள் மாத இறுதிவரை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்படவில்லை.
ஆனாலும் சுகாதாரம், நெறிமுறை ஆகிய இரண்டு குழுக்களை முன்கூட்டியே மீண்டும் சந்திக்க எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கின்றன.
அரசாங்கத்தின் தற்போதைய COVID பதில் முயற்சிகள் தொடர்பாக விவாதிக்க இந்த குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு விடுக்கின்றன.