பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (04) தனது COVID booster தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.
செவ்வாய்க்கிழமை காலை Ottawa மருந்தகம் ஒன்றில் Trudeau தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் கனேடியர்களை தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தினார்.
COVID தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாகாணங்கள் booster தடுப்பூசிகளை வழங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.