மீண்டும் ஒரு முறை Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை சனிக்கிழமை (01) பதிவு செய்தது.
18 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் மூலம் மீண்டும் புதிய தொற்றுகளின் அதிகரிப்பை Ontario சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.
சுகாதார அதிகாரிகள் 18,445 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர்.
இதன் மூலம் Ontarioவின் ஏழு நாளுக்கான தொற்றின் சராசரி 12,495 ஆக அதிகரித்தது.
இது கடந்த வாரம் 5,939 ஆக இருந்தது.
Ontario 12 புதிய மரணங்களும் பதிவாகியுள்ளன.