Omicron திரிபின் அதிகரிப்பின் மத்தியில் சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன.
சமீபத்திய நாட்களில் PCR சோதனையை நாடும் கனடியர்கள், சோதனை மையங்களில் நீண்ட வரிசைகளை எதிர்கொள்கின்றனர்.
Omicron திரிபின் பரவலுக்கு மத்தியில் தேவை அதிகரித்துள்ளதால், சோதனை நேரங்கள் பற்றாக்குறையும் எதிர் கொள்ளப்படுகின்றன.
Ontario மாகாணம் செவ்வாய்க்கிழமை (28) புதிய சோதனை வழிகாட்டுதல்களை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தது.
ஆனாலும் இந்த அறிவித்தல் இந்த வாரத்தின் பிற்பகுதி வரை ஒத்திவைக்கப்பட்டது.