British Colombia மாகாணத்தில் கடுமையான குளிர் எச்சரிக்கை காரணமாக COVID பரிசோதனை நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன.
சமீபத்திய நாட்களில் சோதனைக்கு குறிப்பிடத்தக்க தேவை இருப்பதாக கூறும் சுகாதார ஆணையம், வானிலை காரணமாக சில சேகரிப்பு மையங்களை மூடியுள்ளதாக அறிவித்தது.
சுகாதார ஆணையம் அதன் சோதனைத் தளங்களில் பல மணிநேர காத்திருப்பை எதிர்கொண்ட நிலையில் இந்த மூடல்கள் அறிவிக்கப்பட்டன.
விடுமுறை காலத்திற்கு முன்னரும் இந்த மூடல்களுக்கு முன்னரும், சிலர் ஒரு சோதனையை பெற ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
மேலும், தொற்றின் அறிகுறிகளுடன் கூடிய சிலர் பரிசோதனையை முழுவதுமாக தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொற்றின் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கான சோதனை திறனைப் பாதுகாப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாக, சிறிய அறிகுறிகளை கொண்டுள்ள முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பரிசோதனையை பெற வேண்டிய அவசியமில்லை என Vancouver கடற்கரை பகுதியின் சுகாதார பிரிவு கூறுகின்றது.
British Colombia மாகாணத்தின் வேறு சில சுகாதார பிரிவுகளும் இது போன்ற அறிவுறுத்தலை வழங்கியுள்ளன