கனடிய பிரதமரின் பலவந்த ராஜதந்திர கருத்துகள் காரணமாக கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாக சீனா கூறுகிறது.
சீனா பலவந்த ராஜதந்திரத்தில் ஈடுபடுவதாக பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டியதை அடுத்து, கனடாவுடன் உறவில் விரிசல் ஏற்பட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
சீனா குறித்து கனடாவின் அணுகுமுறையை தவறான புரிதல் மற்றும் தவறான கணக்கீடு என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.
அண்மைய நேர்காணலில் சீனாவின் பலவந்த ராஜதந்திரத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த முன்னணியை கனடிய பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.