கனடாவில் நடைபெற்று வந்த World Juniors Hockey தொடர் இரத்து செய்யப்பட்டது.
தொடரும் COVID தொற்றின் பாதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Albertaவின் Edmonton, Red Deer ஆகிய நகரங்களின் நடைபெற்று வந்த இந்த தொடர் January மாதம் 5ஆம் திகதி வரை நடைபெற இருந்தது.
அணிகளுக்குள் பல தொற்றுகள் கண்டறியப்பட்டதை அடுத்து இன்று இந்த முடிவை சர்வதேச Ice Hockey கூட்டமைப்பின் மருத்துவக் குழு, சர்வதேச Ice Hockey கூட்டமைப்பின் தலைமை, இந்த தொடரின் COVID மருத்துவக் குழுவுடன் இணைந்து எடுத்துள்ளது.
அனைத்து பங்கேற்பாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.