கனடிய தொழிலாளர் அமைச்சர் Seamus O’Reganக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவான சோதனையின் மூலம் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (28) Twitter மூலம் அவர் அறிவித்தார்.
தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாககவும் பொது சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் அவர் கூறினார்.
மூன்று தடுப்பூசிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய அமைச்சர், ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றியுள்ளதாக இருப்பதாகவும் கூறினார்.
அவர் எங்கு, எப்படி தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதை அமைச்சர் பகிர்ந்து கொள்ளவில்லை.
தவிரவும் அவரது உடல்நிலை குறித்த எந்த விவரங்களையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை.
ஒரு வார காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது கனேடிய அமைச்சர் இவராவர்.
கடந்த திங்கட்கிழமை (20) கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Jolyக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.