Ontario முதன்முறையாக 10,000க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்களை சனிக்கிழமை (25) பதிவு செய்துள்ளது.
முதன்முறையாக 10,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்வதாக Ontario பொது சுகாதார மையம் அறிவித்தது.
சனிக்கிழமை பதிவான 10,412 தொற்றுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட முந்தைய சாதனையான 9,571 தொற்றுக்களை விஞ்சியது.
இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் தினசரி தொற்றுகள் எண்ணிக்கையில் மாகாணம் தனது சாதனையை முறியடித்துள்ளது.
சனிக்கிழமை தொற்றுடன் தொடர்புடைய மேலும் நான்கு இறப்புகளையும் பதிவு செய்தது.
Omicron திரிபின் காரணமாக Ontarioவில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
பல பொது சுகாதார பிரிவுகள் தங்கள் சோதனை திறனை அடைந்துள்ளதால், ஒவ்வொரு நாளும் பதிவாகும் எண்ணிக்கையை விட தொற்றுகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.