இந்த ஆண்டு அரசாங்கம் அதன் இலக்குகளை அடைய உதவிய சில தற்காலிக நடவடிக்கைகள் தொற்று நீங்கிய பின்னரும் தொடரக்கூடும் என மத்திய குடிவரவு அமைச்சர் Sean Fraser கூறுகிறார்.
தொற்றின் போது, வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு மக்களைக் கொண்டு வருவது மிகவும் கடினமாகிவிட்டதால், அரசாங்கம் அதன் குடியேற்ற இலக்குகளை அடைய ஏற்கனவே நாட்டில் உள்ள மக்களை நோக்கி திரும்பியது.
இந்த ஆண்டு புதிய நிரந்தர குடியிருப்பாளர்களில் சிலர் குடியேறியவர்கள் மற்றும் பாரம்பரிய வழிமுறைகள் மூலம் கனடாவுக்கு வந்த அகதிகளாக இருந்தபோதிலும், தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடாவை தங்கள் நிரந்தர வசிப்பிடமாக மாற்றுவதற்கு மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியது.
இந்த ஆண்டில் தனது குடியேற்ற இலக்கான 401,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா கடந்துள்ளதாக அமைச்சர் Fraser அறிவித்தார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 411,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா எதிர்பார்க்கின்றது