19 வயதான Scarborough தமிழ் இளைஞரின் மரணம் குறித்த கொலை விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
கொல்லப்பட்டவர் மகிஷன் குகதாசன் என அடையாளம் காணப்பட்டதாக Durham காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர் குறிப்பிடத்தக்க காயங்களுடன் Durham பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது .
Torontoவில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் அங்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த தகவல் வியாழக்கிழமை (23) அதிகாலை 2 மணியளவில் காவல்துறையினருக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது.
இவரது இறப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்த சந்தேக நபர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர் எங்கு காயமடைந்தார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.