கனடாவின் பல மாகாணங்களில் தொடர்ந்தும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன.
COVID தொற்றின் ஐந்தாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன.
Quebecகில் தொற்று பரவுவதைத் தடுக்க மேலும் பொது சுகாதார கட்டுப்பாடுகளை முதல்வர் François Legault புதன்கிழமை (22) அறிவித்தார்.
December 26ஆம் திகதி முதல் இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன், தனியார் வீடுகளில் ஒன்றுகூடுவது 10 பேரில் இருந்து ஆறு ஆக குறைக்கப்படும்.
Manitoba குளிர்கால விடுமுறையைத் தொடர்ந்து பாடசாலைக்கு திரும்பும் திகதியை தாமதப்படுத்துகிறது.
பாடசாலைக்கு திரும்பும் திகதியை January 10 வரை தாமதப்படுத்துவதாக கல்வி அமைச்சர் Cliff Cullen புதன்கிழமை அறிவித்தார்.
Omicron திரிபின் அபாயங்களை மதிப்பிடுவதற்கு பொது சுகாதார அதிகாரிகளுக்கு அவகாசத்தை வழங்குவதே இதன் நோக்கம் என அவர் கூறினார்.