தேசியம்
செய்திகள்

கனடா முழுவதும் பல பகுதிகளில் Omicron ஆதிக்கம்!

இந்த விடுமுறை காலத்தில் கனடியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் Justin Trudeau நினைவூட்டுகிறார்.
Omicron திரிபின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதன்கிழமை (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த நினைவூட்டலை பிரதமர் வெளியிட்டார்.

தொற்றின் பரவலை குறைப்பதற்காக வரவிருக்கும் வாரங்களில் அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுமாறு கனடியர்களை Trudeau வலியுறுத்தினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில்  COVID ஐந்தாவது அலையை  எதிர்த்துப் போராடுவதற்கான கனேடிய மற்றும் அமெரிக்க அரசுகளின் அணுகுமுறைக்கு இடையே உள்ள மாற்றம் குறித்த  ஒரு தெளிவான விளக்கத்தை உருவாக்க நிதி அமைச்சர் Chrystia Freeland முயன்றார்.

தொற்றின் மூலம் கனடாவின் குறைந்த இறப்பு விகிதத்தை சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos இந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

G7 நாடுகளில்  இரண்டாவது குறைந்த இறப்பு விகிதத்தை கனடா கொண்டுள்ளது என அமைச்சர் Duclos கூறினார்

கனடாவில் இதுவரை வரை 2,360க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட Omicron திரிபுகள் பதிவாகியுள்ளதாக  தலைமை பொது சுகாதார அதிகாரி Theresa Tam கூறினார்.

கனடா முழுவதும் பல பகுதிகளில் Omicron இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது எனவும் Tam தெரிவித்தார்.

Related posts

விரைவில் Torontoலில் பெண்கள் தேசிய கூடைப்பந்து அணி?

Lankathas Pathmanathan

COVID கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க பரிந்துரை

Lankathas Pathmanathan

January இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகள் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan

Leave a Comment