தேசியம்
செய்திகள்

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

கனடாவில் செவ்வாய்க்கிழமை (21) தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.

செவ்வாய்க்கிழமை 11,692 புதிய தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

கனடாவில் ஒரு மாகாணத்தில் அதிக தினசரி தொற்றுகளின் எண்ணிக்கையை Quebec பதிவு செய்தது.

5,043 புதிய தொற்றுகள் Quebecகில் பதிவாகின.

இது தொற்று ஆரம்பித்ததில் இருந்து கனடா முழுவதும் பதிவான அதிகபட்ச ஒற்றை நாள் மொத்த எண்ணிக்கையாகும்.

தொற்றுடன் தொடர்புடைய மேலும் எட்டு இறப்புகளை Quebec பதிவு செய்தது.

Ontarioவில் 3,453 புதிய தொற்றுக்கள் பதிவாகின.

தவிரவும் 11 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டன.

Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 3,153 ஆக உள்ளது.

இது முந்தைய வாரத்தில் 1,400ஆக இருந்தது.

சுமார் இரண்டு மில்லியன் Ontario குடியிருப்பாளர்கள் தங்கள் booster தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.

Ontarioவில் 11.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.

British Colombiaவில் 1,308 தொற்றுக்கள் பதிவாகின.

Albertaவில் சுகாதார அதிகாரிகளினால் 786 புதிய தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகின

Nova Scotia ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுகளை பதிவு செய்தது.

522 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் Nova Scotiaவில் பதிவு செய்தனர்

இதன் மூலம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக மாகாணம் அதிக எண்ணிக்கையில் ஒற்றை நாள் தொற்றுகளின் அதிகரிப்பை அறிவித்துள்ளது.

December  15 முதல், Nova Scotia 2,590 புதிய COVID தொற்றுக்களை அறிவித்துள்ளது.

Manitoba 302 புதிய தொற்றுக்களை பதிவு செய்தது.

New Brunswick சுகாதார அதிகாரிகள் 156 தொற்றுக்களை பதிவு செய்தனர்.

Related posts

கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை அமெரிக்க எல்லை திறந்த பின்னர் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்தது!

Gaya Raja

WestJet விமானிகளுக்கு 24% ஊதிய உயர்வு?

Lankathas Pathmanathan

Barbados பிரதமர் – கனடிய பிரதமர் சந்திப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment