கனடாவின் தினசரி COVID தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்ததை விட இந்த வாரம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
Omicron திரிபின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு பதிவானது.
கனடாவில் கடந்த வாரத்தில் தினமும் சராசரியாக 5,000க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவானதாக தலைமை பொது சுகாதார அதிகாரி Theresa Tam தெரிவித்தார்.
COVID தொற்றுகளை தவிர, Omicron திரிபின் அதிகரிப்பையும் கனடா எதிர்கொள்கிறது.
புதிய தரவுகளின் படி 11 மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் கூட்டாக 350 Omicron திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Tam உறுதிப்படுத்தினார்.
அதிகரித்து வரும் இந்த தொற்றுகள் பயணத்துடன் தொடர்புடையவையல்ல என அவர் எச்சரித்தார்.
இதன் மூலம் Omicron திரிபின் சமூகப் பரவல் நாட்டின் பல பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.