தேசியம்
செய்திகள்

வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு

கனடாவின் மாகாணங்கள் பல வெள்ளிக்கிழமை (17) முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் ஒரு நாளுக்கான COVID தொற்றுக்களை பதிவு செய்தன.

கனடாவில் வெள்ளிக்கிழமை மொத்தம் 9,163 தொற்றுக்கள் பதிவாகின.

Quebec 3,700 க்கும் மேற்பட்ட, Ontario 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகளை அறிவித்தன.

Quebecகில் 3,768 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

தொற்றின் காரணமாக மேலும் ஏழு இறப்புகளும் அறிவிக்கப்பட்டன.

Ontario சுகாதார அதிகாரிகள் 3,124 புதிய தொற்றுகளையும் ஐந்து மரணங்களையும் பதிவு செய்தனர்.

Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 1,914 ஆக உள்ளது.

இது முந்தைய வாரத்தில் 1,005 ஆக இருந்தது.

Nova Scotia தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதிகபட்ச ஒற்றை நாள் தொற்றுக்களை பதிவு செய்தது.

394 புதிய தொற்றுக்களை Nova Scotia பதிவு செய்தது.

British Colombiaவில் 789 தொற்றுகளும் மூன்று மரணங்களும், Albertaவில் 553 தொற்றுகளும் ஒரு மரணமும், Manitobaவில் 239 தொற்றுகளும் மூன்று மரணங்களும், New Brunswickகில் 163 தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகின.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் 1,866,907 தொற்றுகளும் 30,032 மரணங்களும் பதிவாகின.

Related posts

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

பசுமை கட்சியின் சார்பில் பெண் தமிழ் வேட்பாளர்

Ontarioவின் சில பகுதிகளில் வார இறுதியில் 80 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Leave a Comment