Ontarioவில் இந்த மாத இறுதிக்குள் தினமும் 10 ஆயிரம் COVID தொற்றுகள் வரை பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Ontario மாகாண அறிவியல் அட்டவணையின் தலைவர் வைத்தியர் Peter Juni இந்த தகவலை கூறினார்.
இதனால் சுகாதாரப் பாதுகாப்பு முறையை பாதுகாப்பதற்காக சில கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.
நாளாந்தம் மாகாணத்தில் உறுதி செய்யப்படும் தொற்றுகளில் 80 சதவீதத்திற்கும் மேலானவை Omicron திரிபின் காரணமாக ஏற்பட்டவை என Ontarioவின் பொது சுகாதார மையத்தின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
November 28 முதல் December 9 வரை Ontarioவில் அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு Omicron திரிபும், முன்னர் ஆதிக்கம் செலுத்திய Delta திரிபு தொடர்புடைய ஒவ்வொரு தொற்றை விட 7.7 மடங்கு அதிகமானவர்களை பாதித்துள்ளது என அதே அறிக்கை மதிப்பிடுகிறது.
குறிப்பிட்ட பரிந்துரைகளை வழங்காவிட்டாலும், Omicron திரிபின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்த பொது சுகாதார பதில் நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.