Mississaugaவில் வாகனம் மோதியதில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) நிகழ்ந்தது.
தனியார் இல்லமொன்றில் இருந்து வெளியேறிய வாகனம் பெண் பாதசாரி மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலியானவர் 56 வயதான நமிர்தலதா பாலசிங்கம் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
இவர் இலங்கையில் இணுவில் கிழக்கை பிறப்பிடமாக கொண்டவராவார்.
செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் அவர் வாகனத்தின் அடியில் சிக்கி இறந்தார் என சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கூறினர்.
இந்த சம்பவத்தின் குறித்த தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.